court

img

பாரபட்சமாக செயல்படும் தேர்தல் ஆணையம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

தேர்தல் ஆணைய விதிப்படி விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி கேட்கும் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பத்தை 2 நாட்களில் பரீசிலித்து அனுமதி தரவேண்டும். தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் 6 நாட்கள் வரை காலதாமதம் செய்து வருவதாகவும், ஒரு சில விளம்பரங்களை அற்ப காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் நிராகரிப்பதாகவும், நிராகரிக்கப்பட்ட விளம்பரங்களுக்கு அனுமதி தர உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு ஏப்ரல் 15-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

 

 

;